×

அல் அமீன் இன்ஜினியரிங் கல்லூரி பட்டமளிப்பு விழா

ஈரோடு, ஏப். 11: ஈரோடு அல்-அமீன் பொறியியல் கல்லூரியின் 6வது ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் அல்ஹாஜ் ஏ.கே.ஜபருல்லா தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஏ.எம்.ஜெ.முகமது ஜூபைர் ரஹ்மான் முன்னிலை வகித்தார். விவிட் இன்போ டெக் சாப்ட்வேர் நிறுவனத்தின் சேர்மன் முபாரக் பாஷா சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவில், கல்லூரியின் தலைவர் மானுல்லா, உபதலைவர் ஷேக் மைதீன், முகமது ஹசன் அலி, சாகுல் ஹமீது, பொருளாளர் இஸ்கந்தர், இணைப்பொருளாளர் சையது அகமது அலி, இணை செயலர் முகமது வாசிம், முகமது அலி, கல்லூரி துணை முதல்வர் முகமது முஸ்தபா, நிர்வாக அதிகாரி முகமது சபியுல்லா ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில், மாணவர்கள், பெற்றோர்கள், அனைத்து துறை தலைவர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Al Amin Engineering College Graduation Ceremony ,
× RELATED ஈரோட்டில் தனியார் இ-சேவை மையங்களில் பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூல்